Venkat Raman I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.

மரச்செக்கு எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

4 sec read

marachekku ennai

எள் அல்லது தேங்காயயை மரத்தால் ஆன செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள்.

மரச்செக்கை மெதுவாக ஓட்டபடுவதால் எண்ணெய் சூடேறாது. ஆகையால், உயிர்சத்துக்கள் இதில் நிறைந்து இருக்கும். வாசனையும் மாறாமல் இருக்கும்.

இந்த எண்ணெய் நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால் அதன் ருசி காலாகாலத்துக்கும் மறக்காது.

இந்த மரச்செக்கு எண்ணெயில் பலகாரங்கள் செய்தால் அதன் மணமும், ருசியும் அபாரமாகவும், அலாதியாகவும் இருக்கும்.

மரச்செக்கு எண்ணெயின் ஊட்டசத்துக்கள்

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த கடலை எண்ணெயையும், தேங்காய் எண்ணெயையும், நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.

இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.

இதில் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான

  • புரோட்டீன்கள்
  • வைட்டமின்கள்
  • தாதுப்பொருள்கள்
  • நார்ச்சத்துக்கள்
  • குளோரோபில்
  • கால்சியம்
  • மெக்னீசியம்
  • காப்பர்
  • இரும்பு
  • பாஸ்பரஸ்
  • வைட்டமின் ” இ ”

போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.

இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர்.

அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக “நல்ல எண்ணெய்” என்று சொன்னார்கள்.

வெளிநாட்டில் கூட இதை ” Queen of Oil ” என்று அழைக்கிறர்கள்.

ஆரோக்கியத்தை மட்டுமே அள்ளித்தரும் மரச்செக்கு எண்ணெய்

மருத்துவ குணம் நிறைந்த வாகை மரத்தினால் ஆன மரச்செக்கில், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட முதல் தரமான எண்ணெய் வித்துக்களை கொண்டு ஆட்டப்பட்டு, ஆயுர்வேத முறைப்படி சூரிய ஒளியில் தெளிவிக்கப்பட்ட நல்லெண்ணெய், கடலெண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய், மனித உடலுக்கு மிகவும் நன்மையானது.

மரச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்கள் முழுமை பெறாத PUFA (Poly Unsaturated Fatty Acid) – நலம் தரும் நல்ல கொலஸ்ட்ராலாக உள்ளது. எனவே இவை எளிதில் ஜீரணமாகும்.

ரோட்டரி செக்கில் (Rotary) ஆட்டப்படும் எண்ணெய்கள் அதிக சூடு ஆவதால் PSFA (Poly Saturated Fatty Acid) ஆக மாறி பிரீ ரேடிக்கல்ஸ் (Free Radicals) தோற்றுவித்து இரத்தத்தை அசுத்தமாக்கி கெட்ட கொலஸ்ட்ராலை கூட்டி இதய இரத்தத்தை தடை செய்கிறது.

பாரம்பரிய உணவு வகைகள் மனிதனுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுத்தது.

மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35 டிகிரி வெப்பம் ( Room Temperature) மட்டுமே வரும். இதில் உயிர்ச்சத்துக்கள் ஒருபோதும் அதன் தன்மையை இழப்பதில்லை. இதுவே மரச்செக்கு எண்ணெய் நம் உடலுக்கும் உயிருக்கும் முழு நன்மை வழங்கும் எண்ணெய்.

இந்த எண்ணெய் பழுப்பு (Light Brown) நிறத்தில் இருக்கும். அடர்த்தி மிகுந்தது.

Budget Friendly – மரச்செக்கு எண்ணெய்

மாதந்தோறும் ஒரு குடும்பத்துக்கு 5 லிட்டர் ரீஃபைன்ட் கடலை எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் குடும்பத்துக்கு மரச்செக்கு மூலம் ஆட்டப்பட்ட எண்ணெய் 3 லிட்டர்தான் செலவாகும். காரணம், இந்த எண்ணெய் அடர்த்தியாக இருக்கும். இதனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தினாலே போதும்.

பொறிப்பதற்கு ஏற்றது.

செயற்கை சாராம்சம் ஊட்டப்படாதது.

மரச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்களின் விலை சற்று அதிகம் தான். உயிரோட்டமுள்ள எண்ணெய் தயாரிக்க பக்குவம், நேரம், செலவு சற்று கூடுதலாகும்.

மாத்திரை, மருந்து, துரித உணவு இவற்றின் விலையை ஒப்பிட்டால் ஆரோக்கியத்தை மட்டுமே அள்ளித்தரும் மரச்செக்கு எண்ணெயின் விலையை அதிகமாக உணரமாட்டோம்.

Venkat Raman I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.

அகல் விளக்கை ஏற்றினால் அதிர்ஷ்டலக்‌ஷ்மியும் குடியிருப்பார்.

கார்த்திகை மாதம் பிறந்ததுமே நாம் கடை வீதிகளில் சென்று விளக்கு, எண்ணெய், நெய், திரி, போன்றவற்றை தரமானதாகவும் சுத்தமானதாகவும் தேடித்தேடி வாங்க தொடங்கி விடுகின்றோம் ஏனெனில் அந்த மாதத்தில் திருக்கார்த்திகை தீபத்தன்று வீடு...
Cold Man
0 sec read

துத்தி மூலிகைச்சாறு வியக்கவைக்கும் மருத்துவ குணங்கள்:

பொதுவாகவே இந்த பெயரை நம் இளம் காலத்தில் கேள்விப்பட்டதுண்டு , குழந்தைகள் மலச்சிக்கலின் காரணமாகவோ அல்லது தீவிர வயிற்றுப்போக்கு காரணமாக அவதிப்பட்டால் அம்மாக்கள் குழந்தைகளுக்கு இந்த இலையில் சாறு அரைத்துக் கொடுப்பது வழக்கம்,...
Cold Man
0 sec read

அத்திப்பழ சாறு: வியக்கவைக்கும் மருத்துவ பயன்கள்

அத்திப்பழம் இன்றும் பலருக்கு நினைக்கும்போதே உண்ண வேண்டும் என்ற ஆசையையும் சிலருக்கு அத்திப்பழமா என்ற முகபாவனையையும் உருவாக்குகிறது ஆனால் அத்திப்பழத்தின் நன்மைகளை அறிந்தால் நாம் நிச்சயமாக இதை தொடர்ந்து பயன்படுத்துவோம் . அத்திப்பழச்சாறு...
Cold Man
0 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *